திருமுறை 3 · 3.013 · 11

திருச்சிற்றம்பலம்

திருப்பூந்தராய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
சீர்காழி - 06-பூந்தராய்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந்துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்அன்னமன் னந்நடைஅரிவை பங்கரே.
சொற்பிரிப்பு
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

மூதணி முப்புரத் தெண்ணி லோர்களைவேதணி சரத்தினால் வீட்டி னாரவர்போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்தாதணி குழலுமை தலைவர் காண்மினே.
சொற்பிரிப்பு
மூதணி முப்புரத்து எண்ணிலோர்களைவேது அணி சரத்தினால், வீட்டினார் அவர்போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்தாது அணி குழல் உமை தலைவர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.
சொற்பிரிப்பு
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக,பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்பொரு(க்) கடல் புடை தரு பூந்தராய் நகர்கரு(க்)கிய குழல் உமை கணவர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

நாகமும் வரையுமே நாணும் வில்லுமாமாகமார் புரங்களை மறித்த மாண்பினர்பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.
சொற்பிரிப்பு
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா,மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர்பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்பாகு அமர் பொழி உமை பங்கர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.
சொற்பிரிப்பு
வெள் எயிறு உடைய அவ் விரவலார்கள் ஊர்ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர்புள் அணி புறவினில் பூந்தராய் நகர்கள் அணி குழல் உமை கணவர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

துங்கியல் தானவர் தோற்ற மாநகர்அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்அங்கய லனகணி அரிவை பங்கரே.
சொற்பிரிப்பு
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்அம் கயல் அன கணி அரிவை பங்கரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தரக்கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.
சொற்பிரிப்பு
அண்டர்கள் உய்ந்திட, அவுணர் மாய்தரக்கண்டவர்; கடல்விடம் உண்ட கண்டனார்புண்டரீக(வ்) வயல் பூந்தராய் நகர்வண்டு அமர் குழலிதன் மணாளர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

மாசின அரக்கனை வரையின் வாட்டியகாய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.
சொற்பிரிப்பு
மா சின அரக்கனை வரையின் வாட்டிய,காய் சின எயில்களைக் கறுத்த கண்டனார்பூசுரர் பொலி தரு பூந்தராய் நகர்காசை செய் குழல் உமை கணவர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

தாமுக மாக்கிய அசுரர் தம்பதிவேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க்கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே.
சொற்பிரிப்பு
தாம் முகம் ஆக்கிய அசுரர் தம் பதிவேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்,பூமகன், அறிகிலா பூந்தராய் நகர்க்கோமகன், எழில் பெறும் அரிவை கூறரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க்கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.
சொற்பிரிப்பு
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்அத் தகும் அழல் இடை வீட்டினார் அமண்புத்தரும் அறிவு ஒணாப் பூந்தராய் நகர்கொத்து அணி குழல் உமை கூறர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்பரமலி குழலுமை நங்கை பங்கரைப்பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.
சொற்பிரிப்பு
புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப்பரம் மலி குழல் உமை நங்கை பங்கரைப்பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர்சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்