திருமுறை 3 · 3.003 · 11

திருச்சிற்றம்பலம்

திருப்புகலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
சீர்காழி - 03-புகலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்புயலன மிடறுடைப் புண்ணியனேகயலன அரிநெடுங் கண்ணியொடும்அயலுல கடிதொழ அமர்ந்தவனேகலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள் நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.
சொற்பிரிப்பு
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்மலையினில் அரிவையை வெருவவன்தோல்அலைவரு மதகரி யுரித்தவனேஇமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.
சொற்பிரிப்பு
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்அலை வரு மதகரி உரித்தவனே!இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலிஉமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பாடினை அருமறை வரல்முறையால்ஆடினை காணமுன் அருவனத்திற்சாடினை காலனைத் தயங்கொளிசேர்நீடுவெண் பிறைமுடி நின்மலனேநினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர் தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே.
சொற்பிரிப்பு
பாடினை, அருமறை வரல்முறையால்;ஆடினை, காண முன் அருவனத்தில்;சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்நீடு வெண்பிறை முடி நின்மலனே!நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்அழல்திகழ் மேனியில் அணிந்தவனேகழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்லமுழவொடும் அருநட முயற்றினனேமுடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே.
சொற்பிரிப்பு
நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்லமுழவொடும் அருநடம் முயற்றினனே!முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலிஅடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்டஉரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்பெருமையை நிலத்தவர் பேசினல்லால்அருமையில் அளப்பரி தாயவனேஅரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப் பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.
சொற்பிரிப்பு
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்டஉரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன்பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்,அருமையில் அளப்பு அரிது ஆயவனே!அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி,பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

அடையரி மாவொடு வேங்கையின்தோல்புடைபட அரைமிசைப் புனைந்தவனேபடையுடை நெடுமதிற் பரிசழித்தவிடையுடைக் கொடிமல்கு வேதியனேவிகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித் தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.
சொற்பிரிப்பு
அடை அரிமாவொடு, வேங்கையின் தோல்,புடை பட அரைமிசைப் புனைந்தவனே!படை உடை நெடுமதில் பரிசு அழித்த,விடை உடைக் கொடி மல்கு, வேதியனே!விகிர்தா! பரமா! நின்னை விண்ணவர் தொழ, புகலித்தகுவாய், மடமாதொடும், தாள் பணிந்தவர் தமக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

அடியவர் தொழுதெழ அமரரேத்தச்செடியவல் வினைபல தீர்ப்பவனேதுடியிடை அகலல்குல் தூமொழியைப்பொடியணி மார்புறப் புல்கினனேபுண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர் நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே.
சொற்பிரிப்பு
அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த,செடிய வல்வினை பல தீர்ப்பவனே!துடி இடை அகல் அல்குல் தூமொழியைப்பொடி அணி மார்பு உறப் புல்கினனே!புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந் நகர்நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா வினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

இரவொடு பகலதாம் எம்மானுன்னைப்பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்தஅரவிரி சடைமுடி ஆண்டகையேஅனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.
சொற்பிரிப்பு
இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப்பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்;குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்தஅர விரிசடை முடி ஆண்டகையே!அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னைஇனம் ஆர் தரு தோள் அடர்த்து, இருந்தனை, புகலியுளே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

உருகிட வுவகைதந் துடலினுள்ளால்பருகிடும் அமுதன பண்பினனேபொருகடல் வண்ணனனும் பூவுளானும்பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய்உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ் வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.
சொற்பிரிப்பு
உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,பருகிடும் அமுது அன பண்பினனே!பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

கையினி லுண்பவர் கணிகைநோன்பர்செய்வன தவமலாச் செதுமதியார்பொய்யவ ருரைகளைப் பொருளெனாதமெய்யவ ரடிதொழ விரும்பினனேவியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.
சொற்பிரிப்பு
கையினில் உண்பவர், கணிகநோன்பர்,செய்வன தவம் அலாச் செதுமதியார்,பொய்யவர் உரைகளைப் பொருள் எனாதமெய்யவர் அடி தொழ விரும்பினனே!வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலிஉயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன் இருந்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்விண்ணவ ரடிதொழ விளங்கினானைநண்ணிய ஞானசம் பந்தன்வாய்மைபண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம் இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.
சொற்பிரிப்பு
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,விண்ணவர் அடி தொழ விளங்கினானை,நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மைபண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்