திருமுறை 3 · 3.001 · 11

திருச்சிற்றம்பலம்

கோயில்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனேபாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
சொற்பிரிப்பு
ஆடினாய், நறுநெய்யொடு,பால்,தயிர்!அந்தணர்பிரியாதசிற்றம்பலம்நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!பாடினாய், மறையோடுபல்கீதமும்!பல்சடைப்பனிகால்கதிர் வெண்திங்கள்சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

கொட்டமேகம ழுங்குழ லாளொடு கூடினாயெரு தேறி னாய்நுதல்பட்டமேபுனைவாய் இசைபாடுவ பாரிடமாநட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்இட்டமாவுறைவா யிவைமேவிய தென்னைகொலோ.
சொற்பிரிப்பு
கொட்டமே கமழும் குழலாளொடுகூடினாய்! எருது ஏறினாய்! நுதல்பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா,நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாதசிற்றம்பலம்இட்டமா உறைவாய்! இவை மேவியது என்னை கொலோ
உரை

உரை எழுதப்படவில்லை

3

நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்றுசூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் சடையார்சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ் சேர்தலாற்கழற் சேவடி கைதொழக்கோலத்தாயருளா யுனகாரணங் கூறுதுமே.
சொற்பிரிப்பு
நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார், பற்றுசூலத்தார், சுடலைப் பொடி நீறு அணிவார், சடையார்,சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி கைதொழ,கோலத்தாய்! அருளாய்! உன காரணம் கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோலவாண்மதி போல முகத்திரண்டம்பலைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்கம்பலைத்தெழு காமுறு காளையர் காதலாற்கழற் சேவடி கைதொழஅம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே.
சொற்பிரிப்பு
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை, கோல வாள்மதிபோலும் முகத்து இரண்டுஅம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையான்கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்சேவடி கைதொழ,அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா, வினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர் தூமணிமிட றாபகு வாயதோர்பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்காதில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ் சேர்தலாற்கழற் சேவடி கைதொழஇல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே.
சொற்பிரிப்பு
தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது ஓர் தூமணிமிடறா! பகுவாயது ஓர்பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா!தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல்சேவடி கைதொழ,இல்லை ஆம் வினைதான் எரிய(ம்) மதில் எய்தவனே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஆகந்தோயணி கொன்றை யாய்அனல் அங்கையாய்அம ரர்க்கம ராஉமைபாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்காமாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னினாய்மழு வாளி னாய் அழல்நாகந்தோயரையாய் அடியாரை நண்ணாவினையே.
சொற்பிரிப்பு
ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்! அமரர்க்கு அமரா! உமைபாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்! மழுவாளினாய்! அழல்நாகம் தோய் அரையாய்! அடியாரை நண்ணா, வினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்கவார்குழை யாய்திக ழப்படும்வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்அங்கையால்தொழ வல்லடி யார்களைவாதியாதகலுந் நலியாமலி தீவினையே.
சொற்பிரிப்பு
சாதி ஆர் பலிங்கி(ன்)னொடு வெள்ளியசங்க வார்குழையாய்! திகழப்படும்வேதியா! விகிர்தா! விழவு ஆர் அணி தில்லை தன்னுள்ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல்லடியார்களைவாதியாது அகலும், நலியா, மலி தீவினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வேயினாற்பணைத் தோளியொ டாடலை வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமுதாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனேதீயினார்கணை யாற்புர மூன்றெய்த செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம்மேயினாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே.
சொற்பிரிப்பு
வேயின் ஆர் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்!விகிர்தா! உயிர்கட்கு அமுதுஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே!தீயின் ஆர் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்! திகழ்கின்ற சிற்றம்பலம்மேயினாய்! கழலே தொழுது எய்துதும், மேல் உலகே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தாரினாற்விரி கொன்றை யாய்மதி தாங்குநீள் சடையாய் தலைவாநல்லதேரினார்மறுகின் திருவாரணி தில்லைதன்னுட்சீரினால்வழி பாடொழி யாததோர் செம்மையாலழ காயசிற் றம்பலம்ஏரினாலமர்ந்தா யுனசீரடி யேத்துதுமே.
சொற்பிரிப்பு
தாரின் ஆர் விரி கொன்றையாய்! மதி தாங்கு நீள்சடையாய்!தலைவா! நல்லதேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை தன்னுள்சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்ஏரினால் அமர்ந்தாய்! உன சீர் அடி ஏத்துதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

வெற்றரையுழல் வார்துவ ராடைய வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின்மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங் காதலாற்கழற் சேவடி கைதொழஉற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே.
சொற்பிரிப்பு
வெற்றுஅரைஉழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள்உரை கொள்ளன்மின்மற்றுஅவர்உலகின்(ன்) அவலம்(ம்)அவை மாற்றகில்லார்கற்றவர் தொழுதுஏத்து சிற்றம்பலம் காதலால் கழல்சேவடி கைதொழஉற்றவர், உலகின் உறுதி கொள வல்லவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறைவல்ல ஞான சம்பந்தன்ஊறும்இன் தமிழா லுயர்ந்தாருறை தில்லைதன்னுள்ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத் தீசனைஇசை யாற்சொன்ன பத்திவைகூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.
சொற்பிரிப்பு
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறை தில்லை தன்னுள்ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவைகூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்