திருமுறை 12 · 12.073 · 5

திருச்சிற்றம்பலம்

நேச நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றாநார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பதாகும்.
சொற்பிரிப்பு
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றாநார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்கார் வளர் சிகர மாடக் காம்பீலி என்பது ஆகும்.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அந்நகர் அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்பன்னகா பரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம்சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார்.
சொற்பிரிப்பு
அந்நகர் அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்மன்னிய தொழிலின் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்பன்னக ஆபரணற்கு அன்பர் பணிதலைக் கொண்டு பாதம்சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார்.
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கிஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கிதாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்பாங்குடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப் போதுக்கு ஆக்கிஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக்கு ஆக்கித்தாங்கு கைத் தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்பாங்கு உடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார்.
உரை

உரை எழுதப்படவில்லை

4

உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்துவிடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்திஅடைவுறு நலத்தர் ஆகி அரனடி நீழல் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்துவிடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்இடை அறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்திஅடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினைசெற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்துபெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்டகொற்ற வேந்தர் கோச்செங்கட் சோழர் பெருமை கூறுவாம்.
சொற்பிரிப்பு
கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக், கலந்த வினைசெற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்துபெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்டகொற்ற வேந்தர் கோச்செங்கட் சோழர் பெருமை கூறுவாம்.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்