திருமுறை 12 · 12.055 · 5

திருச்சிற்றம்பலம்

காரிநாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகைமுறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்.
சொற்பிரிப்பு
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகைமுறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்பால் பயில்வார்.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கிகொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டுவெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச்சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கிக்கொங்கு அலர் தார் மன்னவர்பால் பெற்ற நிதிக் குவைக் கொண்டுவெங்கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம்பிறைச் சென்னிச்சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

3

யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பித்தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம்காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினராய்.
சொற்பிரிப்பு
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பித்தேவர்க்கும் முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர் தம்காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினராய்.
உரை

உரை எழுதப்படவில்லை

4

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்திஆய்ந்த உணர்விடை அறா அன்பினராய் அணி கங்கைதோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்திஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணிகங்கைதோய்ந்த நெடும் சடையார் தம் அருள் பெற்ற தொடர்பினால்வாய்ந்த மனம் போல் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்.
சொற்பிரிப்பு
வேரியார் மலர்க்கொன்றை வேணியார் அடிபேணும்காரியார் கழல் வணங்கி, அவர் அளித்த கருணையினால்.வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்