திருமுறை 12 · 12.049 · 20

திருச்சிற்றம்பலம்

அதிபத்த நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்.
சொற்பிரிப்பு
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர்போல்நன்மை சான்றது நாகப்பட்டினத் திருநகரம்.
உரை

உரை எழுதப்படவில்லை

2

தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்ததேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்காமர் பொற்சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்தமாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு.
சொற்பிரிப்பு
தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்ததேமலர்க் குழல் மாதர் பந்து ஆடு தெற்றிகள் சூழ்காமர் பொன்சுடர் மாளிகைக் ரும்கடல் முகந்தமாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்துதிருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும்தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல்கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால்.
சொற்பிரிப்பு
பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்துதிருமகட்கு வாழ் சேர்விடம் ஆதலில், யாவும்தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரைபோல்கரி, பரித்தொகை, மணி, துகில் சொரிவதாம் கலத்தால்.
உரை

உரை எழுதப்படவில்லை

4

நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்தபீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக்கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும்ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர்.
சொற்பிரிப்பு
நீடு தொல்புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்தபீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக்கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும்ஆடி மண்டலம் போல்வது அவ் அணிகிளர் மூதூர்.
உரை

உரை எழுதப்படவில்லை

5

அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்ததன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி.
சொற்பிரிப்பு
அந்நெடும் திருநகர் மருங்கு அலைகடல் விளிம்பில்பன்நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்மன்னு தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்ததன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி.
உரை

உரை எழுதப்படவில்லை

6

புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பைஅயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல்வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்தகயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள்.
சொற்பிரிப்பு
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை;அயல் அளப்பன மீன்விலைப் பசும்பொனின் அடுக்கல்;வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்தகயல் அளப்பன பரத்தியர் கருநெடும் கண்கள்.
உரை

உரை எழுதப்படவில்லை

7

உணங்கல் மீன் கவர்வுறு நசைக் குருகுடன் அணைந்தகணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல்அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்துமணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழியல மருளும்.
சொற்பிரிப்பு
உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகுடன் அணைந்தகணங்கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையம் கானல்அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடைக்கு அழிந்துமணங்கொள் கொம்பரின் மருங்கு நின்று இழி அலமருளும்.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய.
சொற்பிரிப்பு
வலைநெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்அலைநெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய.
உரை

உரை எழுதப்படவில்லை

9

அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்துமனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்புனை இளம் பிறை முடியவர் அடித்தொண்டு புரியும்வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர்.
சொற்பிரிப்பு
அனையது ஆகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்துமனைவளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்புனை இளம்பிறை முடியவர் அடித் தொண்டு புரியும்வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர்.
உரை

உரை எழுதப்படவில்லை

10

ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்ஏங்கு தெண் திரைக் கடலிடைப் பலபட இயக்கிப்பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவ் அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்ஏங்கு தெண்திரைக் கடல் இடைப் பல படவு இயக்கிப்பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்ஓங்கு பல் குவை உலப்பு இல உடையராய் உயர்வார்.
உரை

உரை எழுதப்படவில்லை

11

முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்துபட்ட மீன்களில் ஒரு தலை மீன் படுந் தோறும்நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால்.
சொற்பிரிப்பு
முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்துபட்ட மீன்களில் ஒருதலை மீன்படும் தோறும்“நட்டம் ஆடிய நம்பருக்கு” என நளிர் முந்நீர்விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால்.
உரை

உரை எழுதப்படவில்லை

12

வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்ஆகும் நாள்களில் அநேக நாள் அடுத்து ஒரு மீனேமேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார்.
சொற்பிரிப்பு
வாகு சேர் வலை, நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்ஏக நாயகர் தம் கழற்கு என விடும் இயல்பால்ஆகு நாள்களில் அநேக நாள் அடுத்து ஒரு மீனேமேக நீர்படி வேலையில் படவிட்டு வந்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

13

மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும்பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்றுமான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்தான் மறுத்தலின் உணவு இன்றி அருங்கிளை சாம்பும்பான்மை பற்றியும் வருந்திலர்; பட்டமீன் ஒன்றுமான்மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

14

சால நாள்கள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்துகோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச்சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தேஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார்.
சொற்பிரிப்பு
சால நாள்கள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்துக்கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச்சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தேஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார்.
உரை

உரை எழுதப்படவில்லை

15

ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்.
சொற்பிரிப்பு
ஆன நாள் ஒன்றில் அவ்ஒரு மீனும் அங்கு ஒழித்துத்தூ நிறப்பசுங் கனக நல் சுடர் நவமணியால்மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்பான்மை அற்புதப் படியது ஒன்று இடு வலைப் படுத்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

16

வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏறஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்.
சொற்பிரிப்பு
வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏறஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்பாங்கு நின்றவர் “மீன் ஒன்று படுத்தனம்” என்றார்.
உரை

உரை எழுதப்படவில்லை

17

என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பாம்ஒன்று மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரித்தார்.
சொற்பிரிப்பு
என்று மற்றுளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்பொன்திரள் சுடர் நவமணி பொலிந்த மீன் உறுப்பால்ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்சென்று பொன்கழல் சேர்க” எனத் திரையொடும் திரித்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

18

அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில்புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்தஇகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல்முகில் விசும்பிடை அணைந்தனர் பொழிந்தனர் முகைப்பூ.
சொற்பிரிப்பு
“அகில லோகமும் பொருள் முதல் தாம்” எனும் அளவில்புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்தஇகல் இல் மெய்த்திருத் தொண்டர் முன், இறைவர் தாம், விடைமேல்முகில் விசும்பு இடை அணைந்தனர்; பொழிந்தனர் முகைப்பூ.
உரை

உரை எழுதப்படவில்லை

19

பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தேஅஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரைநஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்தஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்.
சொற்பிரிப்பு
பஞ்ச நாதமும் எழுந்தன; அதிபத்தர் பணிந்தேஅஞ்சலிக் கரம் சிரமிசை அணைந்து நின்றவரைநஞ்சு வாள் மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்தஞ்சிறப்பு உடை அடியர் பாங்கு உறத் தலை அளித்தார்.
உரை

உரை எழுதப்படவில்லை

20

தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டுமெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கு தாள் வணங்கிமும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும்செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்.
சொற்பிரிப்பு
தம்மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டுமெய்மையே புரி அதிபத்தர் விளங்கு தாள் வணங்கிமும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும்செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்