திருமுறை 12 · 12.046 · 3

திருச்சிற்றம்பலம்

பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்.
சொற்பிரிப்பு
“செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்மெய் உணர்வின் பயன் இதுவே” எனத் துணிந்து விளங்கி ஒளிர்மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆள் ஆனார்பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்றபெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்.
சொற்பிரிப்பு
பொற்பு அமைந்த அரவு ஆரும் புரிசடையார் தமை அல்லால்சொற் பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலை நின்றபெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும்புலவர்மற்றவர் தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள்.
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்தபூங் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்.
சொற்பிரிப்பு
ஆங்கவர் தம் அடி இணைகள் தலைமேல் கொண்டு அவனி எலாம்தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்தபூங்கழலார் புகழ்ச்சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்