திருமுறை 12 · 12.044 · 7

திருச்சிற்றம்பலம்

கணநாத நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்டவாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வனப்பினது அளப்பு இல்லாஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாயகாழி மாநகர்த் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர்.
சொற்பிரிப்பு
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்டவாழி ஞானசம்பந்தர் வந்தருளிய வனப்பினது; அளப்பு இல்லாஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதல் ஆயகாழி மாநகர்த் திருமறையவர் குலக் காவலர் கணநாதர்.
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணிநாயனார்க்கு நல் திருப்பணியாயின நாளும் அன்பொடு செய்துமேய அத் திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்குத்தூய கைத் திருத் தொண்டினில் அவர் தமைத் துறை தொறும் பயில்விப்பார்.
சொற்பிரிப்பு
ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையில் அமர் பெரும் திருத்தோணிநாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்துமேய அத்திருத்தொண்டினில் விளங்குவார். விரும்பி வந்து அணைவார்க்குத்தூய கைத் திருத்தொண்டினில் அவர் தமைத் துறைதொறும் பயில்விப்பார். 2
உரை

உரை எழுதப்படவில்லை

3

நல்ல நந்தவனப் பணி செய்பவர் நறுந்துணர் மலர் கொய்வோர்பல் மலர்த் தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத் திரு மெழுக்கு அமைப்போர்கள்எல்லையில் விளக்கு எரிப்பவர் திரு முறை எழுதுவோர் வாசிப்போர்.
சொற்பிரிப்பு
நல்ல நந்தன வனப் பணி செய்பவர், நறும் துணர் மலர் கொய்வோர்,பல் பணித்தொடை புனைபவர், கொணர் திருமஞ்சனப் பணிக்கு உள்ளோர்,அல்லும் நண்பகலும் திருஅலகிட்டுத், திருமெழுக்கு அமைப்போர்கள்,எல்லை இல்விளக்கு எரிப்பவர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர்.
உரை

உரை எழுதப்படவில்லை

4

இனைய பஃதிருப் பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அத் திருத்தொண்டின்வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிடச் செய்தேஅனைய அத்திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மைமனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்பு உற வழிபடும் தொழில் மிக்கார்.
சொற்பிரிப்பு
இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அத்திருத்தொண்டின்வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிடச் செய்தேஅனைய அத்திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி, அன்பு உறு வாய்மைமனை அறம் புரிந்து, அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார்.
உரை

உரை எழுதப்படவில்லை

5

இப் பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழிமெய்ப் பெரும் திரு ஞான போனகர் கழல் மேவிய விருப்பாலேமுப் பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும்ஒப்பில் காதல் கூர் உளங்களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல்.
சொற்பிரிப்பு
இப்பெருஞ் சிறப்பு எய்திய தொண்டர் தாம், ஏறு சீர் வளர் காழிமெய்ப் பெரும் திரு ஞானபோனகர் கழல் மேவிய விருப்பாலேமுப்பெரும் பொழுது அருச்சனை வழிபாடு, மூளும் அன்பொடு, நாளும்ஒப்பில் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல்.
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஆன தொண்டினில் அமர்ந்த பேரன்பரும் அகலிடத்தினில் என்றும்ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத்தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்திமான நற்பெரும் கணங்களுக்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார்.
சொற்பிரிப்பு
ஆன தொண்டினில் அமர்ந்த பேரன்பரும் அகல் இடத்தினில் என்றும்ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத்தூநறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்திமான நல்பெரும் கணங்கட்கு நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்.
உரை

உரை எழுதப்படவில்லை

7

உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்திஅலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும்மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்திக்குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றாம்.
சொற்பிரிப்பு
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில், உறுதி மெய் உணர்வு எய்திஅலகில் தொண்டருக்கு அறிவு அளித்து அவர் திறம் அவனியின் மிசை ஆக்கும்மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்திக்குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றாம்.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்