திருமுறை 11 · 11.036 · 11

திருச்சிற்றம்பலம்

ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி

1

பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்தாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச்சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
பாலித்து எழில் தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்மாலுற்று அழுந்த அவதரித்தோன் மணி நீர்க்கமலத்துஆலித்து அலர்மிசை அன்னம் நடப்ப அணங்கு இதென்னாச்சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லிபங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்பொங்குவங் கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ்ச்சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
கொங்கு தங்கும் குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லிபங்கு தங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்பொங்கு வங்கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின் கீழ்ச்சங்கு தங்கும் வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்றுதுவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன்திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
குவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிர அன்றுதுவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகை செய்தவன்திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅஃதேவெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகுபுள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயல்உகளத்தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
கள்ளம் பொழில் நனி பள்ளித் தடங்கடம் ஆக்கி அஃதேவெள்ளம் பணி நெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகுபுள்ளொண் தவளப் புரிசங்கொடு ஆலக்கயல் உகளத்தள்ளம் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

ஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்குவீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் மென்கிளிமாந்தேறல்கோ தித்தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின்தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
ஆறதேறும் சடையான் அருள் மேவ அவனியர்க்குவீறதேறும் தமிழால் வழி கண்டவன் மென்கிளிமாந்தேறல் கோதித் தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின்தாறது ஏறும் பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

அந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கேபந்தமுந் தும்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலேசந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
அந்தமுந்தும் பிறவித்துயர் தீர அரனடிக்கேபந்தமுந்தும் தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்வந்துமுந்தும் நந்தம் முத்தம் கொடுப்ப வயற்கயலேசந்தமுந்தும் பொழில் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும்ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனிஉம்பர் பம்பிமின்னும்கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடும் கொக்குறங்கும்தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புக அடைக்கும்ஒண்டலைத் தண்தமிழ்க் குண்டாசனி உம்பர் பம்பி மின்னும்கொண்டலைக் கண்டு வண்டாடப் பெடையொடும் கொக்கு உறங்கும்தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

எண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம்கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம்விண்டலைப் பத்தியில் ஓடும் விரவி மிளர்பவளம்தண்டலைக் கும்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
எண் தலைக்கும் தலைவன் கழல் சூடி என் உள்ளம் வெள்ளம்கண்டலைப்பத் தன் கழல் தந்தவன் கதிர் முத்த நத்தம்விண்டு அலைப் பத்தியில் ஓடும் விரவி மிளிர் பவளம்தண்டலைக்கும் கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும்பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்தசேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச்சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
ஆறு மண்டப் பண்டு செஞ்சொல் நடாத்தி அமண் முழுதும்பாறு மண்டக் கண்ட சைவ சிகாமணி பைந்தடத்தசேறு மண்டச் சங்கு செங்கயல் தேமாங்கனி சிதறிச்சாறு மண்டும் வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின்வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக்கடந்திளைத் துக்கழு நீர்புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித்தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
விடந்திளைக்கும் அரவு அல்குல் மென் கூந்தல் பெருமணத்தின்வடந்திளைக்குங் கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக்கடந்திளைத்துக் கழுநீர் புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித்தடந்திளைக்கும் புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்துஆலிப்ப ஆறதே றுங்கழ னிச் சண்பை அந்தமுந்துமேலிட்ட புண்டலைக் குஞ்சரத் தெண்டலைக் குந்தலைவன்கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே.
சொற்பிரிப்பு
பாலித்த கொங்கு குவளை கள்ளம் பொழில் கீழ்ப் பரந்துஆலிப்ப ஆறது ஏறுங் கழனிச் சண்பை அந்தமுந்துமேலிட்ட புண்டலைக் குஞ்சரத்து எண் தலைக்கும் தலைவன்கோலிட்டவாறு விடந்திளைக்கும் அரவு அல்குலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்