திருமுறை 11 · 11.026 · 23

திருச்சிற்றம்பலம்

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை

அருளியவர்
அதிரா அடிகள்

1

ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்கடதடக் கபோலத் தோரிட மருப்பிற்கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்சேவடி யுகளம் அல்லதுயாவையும் இலமினி இருநிலத் திடையே.
சொற்பிரிப்பு
ஒரு நெடும் கங்கை இருங்கு உறும் பைம்புகர்மும்முகச் செந்நுதி நாலிணர் வெள் நிணக்குடற் புலவு கமழும் அடற் கழுப்படையவன்மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்கட தடக் கபோலத்து ஓரிட மருப்பிற்கரண்டக உதரத்து முரண் தரு குழவி தன்சேவடி உகளம் அல்லதுயாவையும் இலம் இனி இருநிலத்திடையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் -கலந்துளங்கொள்காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்துமாமாரி ஈன்ற மணி.
சொற்பிரிப்பு
நிலம் துளங்க மேருத் துளங்க நெடுவான்தலம் துளங்கச் சப்பாணி கொட்டும் – கலந்து உளங்கொள்காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்துமாமாரி ஈன்ற மணி.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாள்அரக்கர்அணிசிந்த வென்றஎம் ஐயர்க் கிளங்கன்றை அங்கரும்பின்துணிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவிப்பிணிசிந்து கார்முளை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறலே.
சொற்பிரிப்பு
மணிசிந்து கங்கை தன் மானக் குருளையை வாள் அரக்கர்அணிசிந்த வென்ற எம் ஐயர்க்கு இளங்கன்றை அங்கரும்பின்துணிசிந்த வாய்ப்பெய்த போதகத்து ஐத்தொடர்ந்து ஓர் பிறவிப்பிணிசிந்து கார்முளையைப் பிடித்தோர்க்கு இல்லை பேதுறலே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பேதுறு தகையம் அல்லது தீதுறச்செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண்புக்கவண் இரும்பொறித் தடக்கையும்முரணிய பெருந்தோட்கொட்ட நாவி தேவிதன்மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.
சொற்பிரிப்பு
பேதுறு தகையம் அல்லது தீதுறச்செக்கர்க் குஞ்சிக் கருநிறத்து ஒக்கல் நாப்பண்புக்க வண் இரும்பொறித் தடக்கையும்முரணிய பெருந்தோள்கொட்ட நாவி தேவிதன்மட்டுகு தெரியல் அடி மணந்தனமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனைஓய மணியூசல் ஆடின்றே - பாயமழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தைதழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.
சொற்பிரிப்பு
மேய கருமிடற்றர் வெள் எயிற்றர் திண்சேனைஓய மணி ஊசல் ஆடின்றே – பாயமழை செவிக்காற்று உந்திய வாளமர்க் கண் எந்தைதழை செவிக்காற்று உந்தத் தளர்ந்து.
உரை

உரை எழுதப்படவில்லை

6

உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஓடைநெற்றிச்சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர்விந்தத் தளரா மருங்கிற் கிளிபெற்ற வேழக்கன்றின்மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமின்னே.
சொற்பிரிப்பு
உந்தத் தளரா வளைத்தனம் முன்னம் மின் ஓடை நெற்றிச்சந்தத் தளரா ஒருதனித்து எவ்வர் தந்தாள் இரியூர்விந்தத் தளரா மருங்கில் கிளிபெற்ற வேழக்கன்றின்மந்தத் தளரா மலர்ச் சரணங்கள் வழுத்துமின்னே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்துஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளையாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்பிறந்த திவ் வுலகின் பெருமூ தாதைஉரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்ததுமேருச் சிமையத்து மீமிசைவாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.
சொற்பிரிப்பு
மின் நெடும் கொண்டல் அந்நெடு முழக்கத்துஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளையாம் மிக வழுத்துவது எவனோ அவனேல்பிறந்தது இவ்வுலகின் பெரு மூதாதைஉரந்தரு சிரம் அரிந்தவற்கே வரைந்ததுமேருச் சிமையத்து மீமிசைவாரிச் செல்வன் மகள் மகன் மொழியே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறேகழிய வருபொருளே கண்ணே -தெழியகலாலயனே எங்கள் கணபதியே நின்னைஅலாதையனே சூழாதென் அன்பு.
சொற்பிரிப்பு
மொழியின் மறைமுதலே முந்நயனத்து ஏறேகழிய வருபொருளே கண்ணே - தெழியகலாலயனே எங்கள் கணபதியே நின்னைஅலால் ஐயனே சூழாது என் அன்பு.
உரை

உரை எழுதப்படவில்லை

9

அன்பு தவச்சுற்று காரழல் கொண்டெயில் மூன்றெரியவன்புத வத்துந்தை மாட்டுகின் றாம்மதஞ் சூழ்மருப்பிற்கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்டின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.
சொற்பிரிப்பு
அன்பு தவச்சுற்றத்து ஆரழல் கொண்டு எயில் மூன்று எரியவன்பு தவத்து உந்தை மாட்டுகின்றான் மதம்சூழ் மருப்பிற்குகன் புதவக் கரத் தாளமிட்டு ஓடிக் கடுநடையிட்டுஇன்பு உதவச்சென்று நீ அன்று காத்தது இயம்புகவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவனாஅறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள்புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதைவிரைநனி கீறி மூரிஅஞ்சேறு புலர்த்தும் என்பர்மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.
சொற்பிரிப்பு
கவவுமணிக் கேடகக் கங்கணக் கவை வல் நாஅறைகழல் அவுணரொடு பொருத ஞான்று நின்புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதைவிரைநனி கீறி மூரிஅஞ்சேறு புலர்த்தும் என்பர்மஞ்சு ஏறு கயிலை மலை கிழவோயே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

மலைசூழ்ந் திழிகின்ற மாசுணப்பொற் பாறைதலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் - கலைசூழ்திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.
சொற்பிரிப்பு
மலைசூழ்ந்து இழிகின்ற மாசுணப் பொற் பாறைத்தலைசூழ்ந்து தான் இளைப்பது ஒக்கும் – கலைசூழ்திரண்டு அகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்குஅரண்டு அகங்கொள் காலுயிர்க்கும் கை.
உரை

உரை எழுதப்படவில்லை

12

காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்வேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே.
சொற்பிரிப்பு
காலது கையது கண்ணது தீயது கார்மத நீர்மேலது கீழது நூலது வெற்பது பொற்பமை தீம்பாலது தேனது தானது மென்மொழிப் பாவை முப்பூண்வேலது வாளது நான்மறைக்குஈன்ற விடுசுடர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

13

சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்சேய்மூ வுலகம் வலம்வர வேயக்கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்தஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனிஅள்ளல் தீஞ்சுவை அருந்தியவள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.
சொற்பிரிப்பு
சுடர்ப் பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்சேய் மூவுலகம் வலம் வர வேயக்கொன்றையம் படலை துன்று சடைக் கிடந்தஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனிஅள்ளல் தீஞ்சுவை அருந்தியவள்ளற்கு இங்கென் மனங் கனிந்திடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

14

இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்குதேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றேவானாடன் பெற்ற வரை.
சொற்பிரிப்பு
இக்கயங்கொள் மூவலயம் சூழ் ஏழ் தடவரைகள்திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை – புக்கியங்குதேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றேவான் நாடன் பெற்ற வரை.
உரை

உரை எழுதப்படவில்லை

15

பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்தமற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக்கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோசெற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.
சொற்பிரிப்பு
பெற்ற மெல்லோதி சிலம்பின் மகள் பெறப் பிச்சுகந்தமற்றவள் பிச்சன் மயங்கன் முன்னோன் பின் இணைமை மிகக்கற்றவன் ஐயன் புறங்காட்டிடை நடம் ஆட்டுகந்தோசெற்றவெண் தந்தத்தவன் நம்மை ஆட்கொண்டு செய்தனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

16

செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளைவெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்பெருந்திரட் புழைக்கைமண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்பனையடர்ப் பாகன் றன திணையடிநெடும்பொற் சரணம் ஏத்தஇடும்பைப் பெளவம் இனிநீங் கலமே.
சொற்பிரிப்பு
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக் குருளைவெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்பெருந்திரள் புழைக்கைமண்முழை வழங்கும் திண் முரண் ஏற்றின்பனையடர்ப் பாகன் தனது இணையடிநெடும்பொற் சரணம் ஏத்தஇடும்பைப் பெளவம் இனி நீங்கலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

17

அலங்கல் மணிகனகம் உந்தி அருவிவிலங்கல் மிசைஇழிவ தொக்கும் - பலங்கனிகள்உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்துவண்டணைந்து சோரும் மதம்.
சொற்பிரிப்பு
அலங்கல் மணி கனகம் உந்தி அருவிவிலங்கல் மிசை இழிவது ஒக்கும் – பலங்கனிகள்உண்டு அளைந்த கோன் மகுடத்து ஒண் கடுக்கைத் தாதளைந்துவண்டணைந்து சோரும் மதம்.
உரை

உரை எழுதப்படவில்லை

18

மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்றமதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்துமதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.
சொற்பிரிப்பு
மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல் கொன்றமதந்தந்த முக்கண் அரற்கு முன் ஈன்ற அம் மாமலை போல்மதந்தந்த கும்பக் குழவி மந்தாரப் பொன் நாட்டிருந்துமதந்தந்த செம்மலன்றோ வையம் உய்ய வளர்கின்றதே.
உரை

உரை எழுதப்படவில்லை

19

வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்இட்ட மாங்கனிமுழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கைஎந்தை அல்லது மற்று யாவுளசிந்தை செய்யும் தேவதை நமக்கே.
சொற்பிரிப்பு
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்பொதும்பர்த் தும்பி ஒழிவின்றி ஓச்சும்பாரிடைக் குறு நடைத் தோடி ஞாங்கர்இட்ட மாங்கனிமுழுவதும் விழுங்கிய முளைப் பனைத் தடக்கைஎந்தை அல்லது மற்று யாவுளசிந்தை செய்யும் தேவதை நமக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

20

கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்றறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டேஇறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.
சொற்பிரிப்பு
கேளுற்றி யான் தளர ஒட்டுமே கிம்புரிப் பூண்வாளுற்ற கேயூர வாளரக்கர் – தோளுற்றுஅறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டேஇறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.
உரை

உரை எழுதப்படவில்லை

21

ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகஎங் குந்தவளநீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்கஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னைஅல்லால்வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.
சொற்பிரிப்பு
ஏறு தழீஇய வெம் புத்தேள் மருக எங்குந் தவளநீறு தழீஇய எண் தோளவன் செல்வ வண்டு உண்ண நெக்கஆறு தழீஇய கரதலத்து ஐய நின் தன்னை அல்லால்வேறு தழீஇத் தொழுமோ வணங்காத வியன் சிரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

22

சிரமே, விசும்புபோத உயரி இரண்டசும்பு பொழியும்மேகரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மேபுயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மேஅடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மேஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇநெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.
சொற்பிரிப்பு
சிரமே விசும்பு போத உயரி இரண்டு அசும்பு பொழியும்மேகரமே வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மேபுயமே திசை விளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மேஅடியே இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மேஆயினும் அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇநெஞ்சகத்து ஒடுங்குமோ நெடும்பணைச் சூரே.
உரை

உரை எழுதப்படவில்லை

23

சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்துவார்தந் தெழுமதியம் மன்னுமே - சீர்தந்தமாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்தகோமதலை வாண்மதியங் கொம்பு.(24முதல்30 வரையிலான திருப்பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை)
சொற்பிரிப்பு
சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வான் அயிர்த்துவார்தந்து எழுமதியம் மன்னுமே – சீர்தந்தமாமதலை வான்மதி அம்கொம்பு வயிறு உதித்தகோமதலை வாண்மதியம் கொம்பு.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்