திருமுறை 11 · 11.012 · 15

திருச்சிற்றம்பலம்

திருவலஞ்சுழி

அருளியவர்
நக்கீரதேவ நாயனார்
தலம்
வலஞ்சுழி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்படவர வொடுங்க மின்னிக் குடவரைப்பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்உடுத்த மணிநீர் வலஞ்சுழிஅணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.
சொற்பிரிப்பு
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்பொருகடல் முகந்து கருமுகிற் கணம் நல்பட அரவொடுங்க மின்னிக் குடவரைப்பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்மடுக்கும் காவிரி மடந்தை வார்புனல்உடுத்த மணிநீர் வலஞ்சுழிஅணிநீர்க் கொன்றை அண்ணலது அடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அடிப்போது தந்தலைவைத் தவ்வடிகள் உன்னிக்கடிப்போது கைக்கொண்டார் கண்டார் - முடிப்போதாவாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்காணாத செம்பொற் கழல்.
சொற்பிரிப்பு
அடிப்போது தம் தலைவைத்து அவ்வடிகள் உன்னிக்கடிப்போது கைக்கொண்டார் கண்டார் – முடிப் போதாவாள்நாகம் சூடும் வலஞ்சுழியான் வானோரும்காணாத செம்பொற் கழல்.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லார்தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவரந் தாமரையின்நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம்அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.
சொற்பிரிப்பு
கழல்வண்ணமும் சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லார்த்தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவர் அம்தாமரையின்நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிறவண்ணம் நெடியவண்ணம்அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்கடவுள் மன்னிய தடமல்கு வலஞ்சுழிப்பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்திருந்திருங் குழலியைக் கண்டுவருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே.
சொற்பிரிப்பு
அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதல்கடவுள் மன்னிய தடம் மல்கு வலஞ்சுழிப்பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்திருந்து இருங்குழலியைக் கண்டுவருந்தி என் உள்ளம் வந்த அப்போதே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்தாதெலாம் தன்மேனி தைவருமால் -தீதில்மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.
சொற்பிரிப்பு
போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்தாதெலாம் தன்மேனி தைவருமால் - தீதில்மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்பிறைக்கண்டம் கண்டு அணைந்த பெண்.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்பெரு மான்திருமால்வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்மதி சூடிநெற்றிக்கண்கொண்ட கோபம் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப்பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே.
சொற்பிரிப்பு
பெண் கொண்டிருந்து வருந்துங்கொலாம்பெருமான் திருமால்வண்கொண்ட சோலை வலஞ்சுழியான் மதிசூடி நெற்றிக்கண்கொண்ட கோபம் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப்பண்கொண்டு வண்டினம் பாடநின்று ஆர்த்தன பன்முகிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்றஅணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும்சாரல் தண்பொழில் அணைந்து சோரும்தேனுகு தண்தழை செறிதரு வனத்தில்சருவரி வாரல்எம் பெருமநீர் மல்குசடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழிஅணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்தமணிநீர்க் குவளை அன்னஅணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.
சொற்பிரிப்பு
முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்றஅணிநடை மடப்பிடி அருகு வந்து அணைதரும்சாரல் தண்பொழில் அணைந்து சோரும்தேன் உகு தண்தழை செறிதரு வனத்தில்சருவரி வாரல் எம் பெரும நீர் மல்குசடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழிஅணிதிகழ் தோற்றத்து அங்கயத் து எழுந்தமணிநீர்க் குவளை அன்னஅணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

பொருட்டக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும்அருட்டக்கீர் யாதும்ஊர் என்றேன் – மருட்டக்கமாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.
சொற்பிரிப்பு
பொருள் தக்கீர் சில்பலிக்கென் று இல் புகுந்தீரேனும்அருள் தக்கீர் யாதும்ஊர் என்றேன் – மருள் தக்கமாமறையம் என்றார் வலஞ்சுழி நம் வாழ்வென்றார்தாம் மறைந்தார் காணேன் கைச் சங்கு.
உரை

உரை எழுதப்படவில்லை

9

சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகேவங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியாறங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கணக்கன்பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய பாவையையே.
சொற்பிரிப்பு
சங்கம் புரளத் திரைசுமந்து ஏறும் கழி அருகேவங்கம் மலியும் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியாறுஅங்கம் புலன் ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண் நக்கன்பங்குஅன்று இருவர்க்கு ஒருவடிவாகிய பாவையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

பாவை ஆடிய துறையும் பாவைமருவொடு வளர்ந்த அன்னமும் மருவித்திருவடி அடியேன் தீண்டிய திறனும்கொடியேன் உள்ளங்கொண்ட சூழலும், கள்ளக்கருங்கண் போன்ற காவியும் நெருங்கிஅவளே போன்ற தன்றே தவளச்சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்துதேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்தவெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழிவண்டினம் பாடுஞ் சோலைக்கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.
சொற்பிரிப்பு
தான் ஏறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்தேன்ஏறு கொன்றைத் திறம் பேசேன் – வான்ஏறுமையாரும் சோலை வலஞ்சுழியான் என்கொல் என்கையார் வளை கவர்ந்தவாறு.
உரை

உரை எழுதப்படவில்லை

11

தான்ஏறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்தேன்ஏறு கொன்றைத் திறம்பேசேன் - வான்ஏறுமையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்கையார் வளைகவர்ந்த வாறு.
சொற்பிரிப்பு
தான் ஏறும் ஆன் ஏறு கை தொழேன் தன் சடைமேல்தேன் ஏறு கொன்றைத் திறம் பேசேன் - வான் ஏறுமையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல் என்கையார் வளை கவர்ந்தவாறு.
உரை

உரை எழுதப்படவில்லை

12

ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக்கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்குநாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார்சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.
சொற்பிரிப்பு
ஆறு கற்றைச் சடைக் கொண்டொர் ஒற்றைப் பிறைசூடி மற்றைக்கூறு பெண்ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்குநாறுதண் கொம்பர் அன்னீர்கள் இன்னே நடந்தே கடந்தார்சீறு வென்றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே.
உரை

உரை எழுதப்படவில்லை

13

நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்தசெறிதரு தமிழ்நூல் சீறியாழ்ப் பாணபொய்கை யூரன் புதுமணம் புணர்தரமூவோம் மூன்று பயன்பெற் றனவே நீஅவன்புனைதார் மாலை பொருந்தப் பாடிஇல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ளவாசகம் வழாமல் பேச வண்மையில்வானர மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல்எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇவிழையா இன்பம் பெற்றனர் யானேல்அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச்சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பில்தீநீர் அன்ன வாய்நீர் சோரும்சிலம்புகுரற் சிறுபறை பூண்டஅலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.
சொற்பிரிப்பு
நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்தசெறிதரு தமிழ்நூல் சீறியாழ்ப் பாணபொய்கை யூரன் புதுமணம் புணர்தரமூவோம் மூன்று பயன்பெற்றனவே நீ அவன்புனைதார் மாலை பொருந்தப் பாடிஇல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ளவாசகம் வழாமல் பேச வண்மையில்வானர மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல்எங்கையர் கொங்கைக் குங்குமம் தழீஇவிழையா இன்பம் பெற்றனர் யானேல்அரன் அமர்ந்து உறையும் அணிநீர் வலஞ்சுழிச்சுரும்பு இவர் நறவயல் சூழ்ந்தெழு கரும்பில்தீநீர் அன்ன வாய்நீர் சோரும்சிலம்பு குரற் சிறுபறை பூண்டஅலம்புகுரற் கிண்கிணிக் களிறு பெற்றனனே.
உரை

உரை எழுதப்படவில்லை

14

தனம்ஏறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ - இனம்ஏறிப்பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்கோடாலங் கண்டணைந்த கொம்பு.
சொற்பிரிப்பு
தனம் ஏறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய்மனம் வேறுபட்டொழிந்தாள் மாதோ – இனம் ஏறிப்பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்கோடாலம் கண்டணைந்த கொம்பு.
உரை

உரை எழுதப்படவில்லை

15

கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்றுநம்பா எனவணங் கப்பெறு வானை நகர்எரியஅம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானைஅண் ணாமலைமேல்வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே.
சொற்பிரிப்பு
கொம்பார் குளிர் மறைக்காடனை வானவர் கூடிநின்றுநம்பா என வணங்கப் பெறுவானை நகர் எரியஅம்பு ஆய்ந்தவனை வலஞ்சுழியானை அண்ணாமலை மேல்வம்பார் நறுங்கொன்றைத் தாருடையானை வணங்குதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்