திருமுறை 11 · 11.002 · 11

திருச்சிற்றம்பலம்

கொங்கை திரங்கி

அருளியவர்
காரைக்கால் அம்மையார் (பேயார்)
பண்
நட்டபாடை
தலம்
ஆலங்காடு
நாடு
தொண்டைநாடு

1

கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்தங்கி அலறி உலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசிஅங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப்பங்கி சிவந்து இருபற்கள் நீண்டு பரடு உயர் நீள்கணைக்கால் ஓர் பெண்பேய்தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசிஅங்கம் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையைவிள்ள எழுதி வெடுவெடென்ன நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச் சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்திஅள்ளி அவிக்கநின் றாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையைவிள்ள எழுதி வெடுவெடு என்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச் சுட்டிட முற்றும் சுளிந்து பூழ்திஅள்ளி அவிக்க நின்று ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப மயங்கிருள் கூர்நடு நாளையாங்கேகூகையொ டாண்டலை பாடஆந்தை கோடதன் மேற்குதித் தோடவீசிஈகை படர்தொடர் கள்ளிநீழல் ஈமம் இடுசுடு காட்டகத்தேஆகங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
வாகை விரிந்து வெ ண்நெற்று ஒலிப்ப மயங்கு இருள்கூர் நடு நாளைஆங்கேகூகையொடு ஆண்டலை பாட ஆந்தை கோடு அதன் மேற் குதித்து ஓட வீசிஈகை படர்தொடர் கள்ளி நீழல் ஈமம் இடு சுடு காட்டகத்தேஆகம் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

குண்டிலோ மக்குழிச் சோற்றைவாங்கிக் குறுநரி தின்ன அதனைமுன்னேகண்டிலோம் என்று கனன்றுபேய்கள் கையடித் தோடிடு காடரங்காமண்டலம் நின்றங் குளாளம்இட்டு வாதித்து வீசி எடுத்தபாதம்அண்டம் உறநிமிர்ந் தாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
குண்டில் ஓமக்குழிச் சோற்றை வாங்கிக் குறுநரி தின்ன அதனை முன்னேகண்டிலோம் என்று கனன்று பேய்கள் கையடித்து ஓடிடு காடு அரங்காமண்டலம் நின்று அங்கு உளாளம்இட்டு வாதித்து வீசி எடுத்தபாதம்அண்டம் உற நிமிர்ந்து ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

விழுது நிணத்தை விழுங்கியிட்டு வெண்தலை மாலை விரவப்பூட்டிக்கழுதுதன் பிள்ளையைக் காளியென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவுகாணாதழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
விழுது நிணத்தை விழுங்கியிட்டு வெண்தலை மாலை விரவப்பூட்டிக்கழுது தன் பிள்ளையைக் காளி என்று பேரிட்டுச் சீருடைத்தா வளர்த்துப்புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவுகாணாதுஅழுது உறங்கும் புறங்காட்டில் ஆடும் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய் பருந்தொடு கூகை பகண்டைஆந்தைகுட்டி யிடமுட்டை கூகைபேய்கள் குறுநரி சென்றணங் காடுகாட்டில்பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கேஅட்டமே பாயநின் றாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
பட்டடி நெட்டுகிர்ப் பாறுகால்பேய் பருந்தொடு கூகை பகண்டை ஆந்தைகுட்டி இட முட்டை கூகை பேய்கள் குறுநரி சென்று அணங்கு ஆடுகாட்டில்பிட்டடித்துப் புறங்காட்டில் இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கேஅட்டமே பாய நின்று ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்தழலுள் எரியும் பிணத்தைவாங்கித் தான்தடி தின்றணங் காடுகாட்டிற்கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக் காலுயர் வட்டணை இட்டுநட்டம்அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட்டு ஓடி ஆடித்தழலுள் எரியும் பிணத்தை வாங்கித் தான்தடி தின்று அணங்கு ஆடுகாட்டில்கழல்ஒலி ஓசைச் சிலம்பு ஒலிப்பக் கால்உயர் வட்டணை இட்டு நட்டம்அழல் உமிழ்ந்து ஓரி கதிக்க ஆடும் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நாடும் நகரும் திரிந்துசென்று நன்னெறி நாடி நயந்தவரைமூடி முதுபிணத் திட்டமாடே முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்காடுங் கடலும் மலையும் மண்ணும் விண்ணுஞ் சுழல அனல்கையேந்திஆடும் அரவப் புயங்கன்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
நாடும் நகரும் திரிந்து சென்று நன்னெறி நாடி நயந்தவரைமூடி முதுபிணத்து இட்டமாடே முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்காடும் கடலும் மலையும் மண்ணும் விண்ணும் சுழல அனல்கைஏந்திஆடும் அரவப் புயங்கன் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணைமத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித்தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம் உழை இளி ஓசை பண் கெழுமப் பாடிச்சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம் வீணைமத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம் குடமுழா மொந்தை வாசித்துஅத்தனை விரவினோடு ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

புந்தி கலங்கி மதிமயங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்சந்தியில் வைத்துக் கடமைசெய்து தக்கவர் இட்டசெந் தீவிளக்காமுந்தி அமரர் முழவின்ஓசை திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்கஅந்தியில் மாநடம் ஆடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
புந்தி கலங்கி மதி மயங்கி இறந்தவரைப் புறங்காட்டில் இட்டுச்சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்ட செந்தீ விளக்காமுந்தி அமரர் முழவின்ஓசை திசை கதுவச் சிலம்பு ஆர்க்கஆர்க்கஅந்தியில் மாநடம் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்பப்பினை யிட்டுப் பகண்டை யாடப் பாடிருந் தந்நரி யாழ்அமைப்பஅப்பனை அணிதிரு ஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே.
சொற்பிரிப்பு
ஒப்பினை இல்ல வன் பேய்கள் கூடி ஒன்றினை ஒன்றடித்து ஒக்கலித்துப்பப்பினை இட்டுப் பகண்டை ஆடப் பாடிருந்து அந்நரி யாழ் அமைப்பஅப்பனை அணிதிருஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்கால்பேய்செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே.11
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்