திருமுறை 10 · 10.08.33 · 11

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நாசி நுனியினின் நான்மூ விரலிடைஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்பேசி யிருக்கும் பெருமறை யம்மறைகூசி யிருக்குங் குணமது வாமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்துரிமையுங் கன்மமும் உன்னும் பிறவிப்கருவினை யாவது கண்டகன் றன்பின்புரிவன கன்மக் கயத்துட் புகுமே.

3

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்மாயை மறைய மறையவல் லார்கட்குக்காயமும் இல்லை கருத்தில்லை தானே.

4

மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்துதாழ அடைப்பது தன்வலி யாமே.

5

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்ஆசூச மானிடம் ஆசூச மாமே.

6

ஆசூச மில்லை அருநிய மத்தருக்குஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்குஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்குஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.

7

வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.

8

தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்தூய்மணி தூயனல் தூரறி வாரில்லைதூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்தூய்மணி தூயனல் தூயவு மாமே.

9

தூயது வாளா வைத்தது தூநெறிதூயது வாளா நாதன் திருநாமம்தூயது வாளா அட்டமா சித்தியும்தூயது வாளாத் தூயடிச் சொல்லே.

10

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தைஅருளது போற்றும் அடியவ ரன்றிச்சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.

11

வினையா மசத்து விளைவ துணரார்வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்வினையாளர் மிக்க விளைவறி யாரே.