திருமுறை 10 · 10.08.08 · 27

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலிவிஞ்சும் உடலுயிர் வேறு படுத்திடவஞ்சத் திருந்த வகையறிந் தேனே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

சத்தி பராபரம் சாந்தி தனிலானசத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்துசத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.

3

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கேஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே.

4

அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்றவிஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடுநஞ்சற நாடி நயம்செய்யு மாறே.

5

உரிய நனாத்துரி யத்தில் இவனாம்அரிய துரிய நனவாதி மூன்றில்பரிய பரதுரி யத்தில் பரனாம்திரிய வரும்துரி யத்தில் சிவமே.

6

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்பரமாம் அதீதம் பயிலப் பயிலப்பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.

7

ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்தூய அறிவு சிவானந்த மாகிப்போய்வேயும் பொருளாய் விளைந்தது தானே.

8

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டுநரிகளை ஓடத் துரத்திய நாதர்க்குஉரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே.

9

நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்அன்றே இவனும் அவன்வடி வாமே.

10

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்இருந்த இடத்திடை ஈடான மாயைபொருந்தும் துரியம் புரியில்தா னாகும்தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.

11

உன்னை அறியாது உடலைமுன் நான்என்றாய்உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.

12

கருவரம்பு ஆகிய காயம் துரியம்இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்குருவரம் பெற்றவர் கூடிய பின்னைஇருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே.

13

அணுவின் துரியத்தில் ஆன நனவும்அணுஅசை வின்கண் ஆனகனவும்அணுஅசை வில்பரா தீதம் சுழுத்திபணியில் பரதுரி யம்பர மாமே.

14

பரதுரி யத்து நனவும் பரந்துவிரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்திஉருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

15

பரமா நனவின்பின் பால்சக முண்டதிரமார் கனவும் சிறந்த சுழுத்திஉரமாம் உபசாந்தம் உற்றல் துறவேதரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.

16

சீவன் துரியம் முதலாகச் சீரானஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்துஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியேமேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

17

பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்பரம்சிவன் மேலாம் பரநனவாகவிரிந்த கனாவிடர் வீட்டும் சுழுனைஉரந்தகும் மாநந்தி யாம்உண்மை தானே.

18

சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாதம்மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதிதேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.

19

கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்னைஅலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்குறிப்பது கோலம் அடலது வாமே.

20

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்தன்னை அறியில் தயாபரன் எம்இறைமுன்னை அறிவு முடிகின்ற காலமும்என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.

21

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

22

மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தின் மறைந்தது மாமத யானைபரத்தை மறைத்தது பார்முதல் பூதம்பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

23

ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகிவேறான தானே யகாரமாய் மிக்கோங்கிஈறார் பரையின் இருளற்ற தற்பரன்பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

24

துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதிவிரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்புரியப் பரையில் பராவத்தா போதம்திரியப் பரமம் துரியம் தெரியவே.

25

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.

26

ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டுஎய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகிஉய்யும் பராவத்தை உள்ளுறல் சுத்தமே.

27

நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.