திருமுறை 10 · 10.07.21 · 38

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தேசேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தானே அருளால் சிவயோகம் தங்காதுதானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே.

3

மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டுஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே.

4

ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடுஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே.

5

செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமேஎய்யும் கலைகாலம் இந்து பருதிகால்நையுமிடத்து ஓடி நன்காம நூல்நெறிசெய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.

6

விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே.

7

கொண்ட குணனே நலமேநற் கோமளம்பண்டை உருவே பகர்வாய் பவளமேமிண்டு தனமே மிடைய விடும் போதில்கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே.

8

விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலேதொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதியகட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மைசீர்ப்பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே.

9

பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்றுவார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியேசேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே.

10

வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லைவித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லைவித்தினில் வித்தை விதற உணர்வரேல்மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே.

11

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்கருத்தது வித்தாய்க் காரண காரியம்கருத்தறு மாறுஇவை கற்பனை தானே.
சொற்பிரிப்பு
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்கருத்தது வித்தாய்க் காரண காரியம்கருத்தறு மாறுஇவை கற்பனை தானே
உரை

உரை எழுதப்படவில்லை

12

ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்அழியாப் பிராணன் அதிபலஞ் சத்திஒழியாத புத்தி தபஞ்செப மோனம்அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே.

13

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்றுமுற்று மதியத்து அமுதை முறைமுறைசெற்றுண் பவரே சிவயோகி யாரே.

14

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்ஆகிய விந்து அழியாத அண்ணலே.

15

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்துஉண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.

16

அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்அறிவாய் நனவில் அதீதம் புரியச்செறிவாய் இருந்து சேரவே மாயுமே.

17

மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்காதலது ஆகிய காமம் கழிந்திடும்சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்சோதியின் உள்ளே துரிசறும் காலமே.

18

காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்காலங் களின்விந்து செற்றுற்ற காரிகைகாலின்கண் வந்த கலப்பறி யாரே.

19

கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தைவிலக்கு வனசெய்து மேலணை வீரே.
சொற்பிரிப்பு
கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தைவிலக்கு வனசெய்து மேலணை வீரே
உரை

உரை எழுதப்படவில்லை

20

மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்கோலால் நடத்திக் குறிவழி யேசென்றுபாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்மாலா னதுமான மாளும் அவ்விந்துவே.

21

விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.
சொற்பிரிப்பு
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே
உரை

உரை எழுதப்படவில்லை

22

விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்துநந்திய அங்கிய னாலே நயந்தெரிந்துஅந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

23

அமுதச் சசிவிந்து வாம்விந்து மாளஅமுதப் புனலோடி அங்கியின் மாளஅமுதச் சிவயோகம்1 ஆதலால் சித்திஅமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே.பா-ம் : 1 சிவபோகம்
சொற்பிரிப்பு
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாளஅமுதப் புனலோடி அங்கியின் மாளஅமுதச் சிவயோகம் ஆதலால் சித்திஅமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

24

யோகம் அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்துஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்போகம் சிவபோகம் போகிநற் போகமாமோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

25

மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்துகாதலி னால்விடார் யோகம் கலந்தவர்மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர்காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.
சொற்பிரிப்பு
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்துகாதலி னால்விடார் யோகம் கலந்தவர்மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர்காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே
உரை

உரை எழுதப்படவில்லை

26

சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்ஏற்றிய மூலத் தழலை எழமூட்டிநாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடுஆற்றி அமுதம்அருந்தவித் தாமே.

27

விந்துவும் நாதமும் மேலக் கனல்மூலவந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்சிந்தனை மாறச் சிவம்அக மாகவேவிந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.

28

வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பவன்வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே.

29

அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டுமன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டுமின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிடவன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே.

30

அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்துதன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே.

31

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவைசென்று பராசக்தி விந்து சயந்தன்னைஒன்ற உரைக்க உபதேசம் தானே.

32

தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லைவானே உயர்விந்து வந்த பதினான்குமானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்தானே சிவகதி தன்மையும் ஆமே.

33

விந்துவும் நாதமும் விளைய விளைந்ததுவந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்விந்து அடங்க விளையும் சிவோகமே1பா-ம் : 1சிவபோகமே
சொற்பிரிப்பு
விந்துவும் நாதமும் விளைய விளைந்ததுவந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்விந்து அடங்க விளையும் சிவோகமே
உரை

உரை எழுதப்படவில்லை

34

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றிநிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையைஅறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.

35

விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்சந்திர னோடே தலைப்படு மாயிடில்அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே.

36

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்னஇனத்தெழு வார்கள் இசைந்தன நாடிமனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.

37

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்துஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்குஅத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே.

38

உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கிகருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம்விரவிய கந்தரம் மேல்வெளி யாமே.