திருமுறை 10 · 10.07.04 · 23

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கூடிய பாதம் இரண்டும் படிமிசைபாடிய கையிரண்டு எட்டுப்1 பரந்தெழுந்தேடு முகம்ஐந்து செங்கையின்2 மூவைந்துநாடும் சதாசிவம் நல்லொளி முத்தே.பா-ம் : 1எட்டும் 2செங்கணின்
சொற்பிரிப்பு
கூடிய பாதம் இரண்டும் படிமிசைபாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழுந்தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்துநாடும் சதாசிவம் நல்லொளி முத்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்சாதா ரணமாம் சதாசிவந் தானே.

3

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலைஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

4

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடுஅத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

5

சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துளசமயத்து எழுந்த இராசி ஈராறுளசமயத்து எழுந்த சரீரம்ஆ1 றெட்டுளசமயத்து எழுந்த சதாசிவந் தானே.பா-ம் : 1சதிரீராறு எட்டுள
சொற்பிரிப்பு
சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துளசமயத்து எழுந்த இராசி ஈராறுளசமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டுளசமயத்து எழுந்த சதாசிவந் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்குநடுவு படிகநற் குங்குமவன்னம்அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே.

7

அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுளஅஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுளஅஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

8

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்சத்தி சிவமிக்க தாபர சங்கமம்சத்தி உருவம் அருவம் சதாசிவம்சத்தி சிவதத்துவ முப்பத் தாறே.

9

தத்துவ மாவது அருவம் சராசரம்தத்துவ மாவது உருவம் சுகோதயம்தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.

10

கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறைவேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடுமாறுசெய் வான் என் மனம்புகுந் தானே.

11

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே.

12

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்உத்தரம் வாமம் உரைத்திடும் சத்திபச்சிமம் பூருவம் தற்புரு டன்னுரைதெற்கி லகோரம் வடகிழக் கீசனே.

13

நாணுநல் ஈசானன நடுவுச்சி தானாகும்தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்காணும் அகோரம் இருதயம் குய்யமாம்மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே.

14

நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம்வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே.

15

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதிவண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம்பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே.

16

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்சத்தி உருவாம் சதாசிவன் தானே.

17

மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்தான் நந்தி அஞ்சின் தனிச்சுடை ராய்நிற்கும்கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில்மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

18

ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்துஎன்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பதுதென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடிநின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.

19

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யேபணிந்தேன் பகலவன்1 பாட்டும் ஒலியே.பா-ம் : 1 பகவன்றன்
சொற்பிரிப்பு
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம்புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யேபணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.
உரை

உரை எழுதப்படவில்லை

20

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில்ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமெனஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

21

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்தன்மேனி தானாகும் தற்பரம் தானே.

22

ஆரும் அறியார் அகாரம் அவனென்றுபாரும் உகாரம் பரந்திட்ட நாயகிதாரம் இரண்டும் தரணி முழுதுமாய்மாறி எழுந்திடும் ஓசையதாமே.

23

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.