திருமுறை 10 · 10.06.11 · 8

திருச்சிற்றம்பலம்

ஆறாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர்ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால்ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லைநன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே.

3

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்அவமான சாதனம் ஆகாது தேரில்நவமா மவர்க்கது சாதன நான்கும்உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

4

சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவேசெத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
சொற்பிரிப்பு
சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவேசெத்துத் திரிவர் சிவஞானி யோர்களே
உரை

உரை எழுதப்படவில்லை

5

அடியா ரவரே யடியா ரலாதார்அடியாரு மாகார்அவ் வேடமு மாகாஅடியார் சிவஞான மானது பெற்றோர்அடியா ரலாதார் அடியார்கள் அன்றே.

6

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமேஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

7

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானிதானத்தில் வைத்த தனியால யத்தனாம்மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்ஏனைத் தவசி இவனென லாகுமே.

8

தானற்ற தன்மையுந் தானவ னாதலும்ஏனைய வச்சிவ மான இயற்கையுந்தானுறு சாதக முத்திரை சாத்தலுமேனவும் நந்தி பதமுத்தி பெற்றதே.