திருமுறை 10 · 10.06.02 · 15

திருச்சிற்றம்பலம்

ஆறாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியேபசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்சிவந்த குருவந்து சென்னிகை வைக்கஉவந்த குருபதம் உள்ளத் துவந்ததே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தாடந்த போதே தலைதந்த எம்மிறைவாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டுவீடந்த மின்றியே யாள்கென விட்டருட்பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

3

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டுஆன சொரூபங்கள் நான்கும் அகற்றினஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்திதானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

4

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்கரையற்ற சத்தாதி நான்குங் கடந்தசொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே.

5

குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்டரிய பொருள்முத் திரையாகக் கொண்டுபெரிய பிரானடி நந்தி பேச்சற்றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே.

6

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலேமாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டுவாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

7

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்பதிவித்த பாதப் பராபரன் நந்திகதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.

8

திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்கருவழி வற்றிடக் கண்டுகொண் டேனே.

9

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

10

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினைமால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

11

கழலார் கமலத் திருவடி என்னும்நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியாஅழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்ததே.

12

முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

13

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டுமெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே.

14

அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்முடிசார வைத்தனர் முன்னை முனிவர்படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

15

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்எந்தை பிரான்தன் இணையடி தானே.