திருமுறை 10 · 10.03.10 · 8

திருச்சிற்றம்பலம்

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

போதுகந் தேறும் புரிசடை யானடியாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடுமாதுகந் தாடிடு மால்விடை யோனே
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்கற்றிருந் தாங்கே கருது மவர்கட்குமுற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே

3

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்தருந்தண் முழவங் குழலும் இயம்பஇருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே

4

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ளஎம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்லஇன்பக் கலவி இருக்கலு மாமே

5

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்ஆரிவன் என்ன அரனாம் இவனென்னஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்காருறு கண்டனை மெய்கண்ட வாறே

6

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடைஇல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே

7

தூங்க 1வல் லார்க்கும் துணையேழ் புவனமும்வாங்கவல் லார்க்கும் வலிசெய்து 2நின்றிடுந்தேங்க 3வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந்தாங்கவல் லார்க்குந் தன்தன்னிட மாமேபா-ம் : 1வல்லார்க்குத் 2நின்றிட்டுத் 3வல்லார்க்குத்
சொற்பிரிப்பு
தூங்க வல் லார்க்கும் துணையேழ் புவனமும்வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடுந்தேங்க வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந்தாங்கவல் லார்க்குந் தன்தன்னிட மாமே
உரை

உரை எழுதப்படவில்லை

8

காரிய மான உபாதியைத் தாங்கடந்தாரிய காரணம் ஏழுந்தன் பாலுறஆரிய காரண மாய தவத்திடைத்தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே