சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியேசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கியேசுற்றி வந்து ஐயன் பாதம் தேடினேன்சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன் (சரணம்)
பவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடதவக்கோலமாம் துளசிமாலை தாங்கினேன்தாரணியில் உன் புகழை பாடினேன் (சரணம்)
சரமெடுத்து தீர்த்தமாடி வேட்டையாடி கூட்டம் கூடிபேட்டையிலே துள்ளி வந்தேன் ஸ்வாமியே அதுபேரானந்தம் பேரானந்தம் ஸ்வாமியே (சரணம்)
இருமுடியும் தாங்கிக் கொண்டு பெருவழியில் நடக்கையிலேகரிமலையில் கதறுகிறேன் ஐயனே என்னைக்காத்தருள வேண்டுகிறேன் மெய்யனே (சரணம்)
பாவனமாம் பம்பாதனில் பாலகனே உன்னைக் கண்டுபாட்டுப்பாட பாபவினை போகுதேபக்தியோடு கை உனையே கூப்புதே (சரணம்)
ஆறுவாரம் நோன்பிருந்து ஆறுமூன்று படியேறிஆரவாரக் கூட்டத்துக்கு நடுவிலேஆனந்தமாய் தரிசனமும் காண்பேனே (சரணம்)