ஐயப்பன் வழிபாடு ›

மாடன் வரானே

மாடன் வரானே கம்பத்தடி மாறன் வரானேஎங்கள் மாடன் வரானே கம்பத்தடி மாறன் வரானே
அந்திப்போ சந்தையிலே மாடனும் ஆடிக்கொண்டாடி வரசுந்தர தோழனுக்கு மாடனும் சொல்லிகொண்டாடி வரார்எங்கள் சுந்தர தோழனுக்கு மாடனும் சொல்லிகொண்டாடி வரார்
அந்தந்த பேய்கள் எல்லாம் அங்கிருந்து ஆடிக்கொண்டாடி வரதென்திர தீராவென்று மாடனும் ஆடிக்கொண்டாடி வரார்
மஞ்சளை பூசிக்கொண்டு மாடனும் மஞ்சள் நீராடையிலேபங்காள இசக்கியுடன் மாடனும் வாளோடு கையிலேந்தி
கையில் குண்டாந்தடியாம் மாடனுக்கு காலினில் சள்ளடமாம்கண்கள் தீபொறி போலே மாடனுக்கு கழுத்துக்கு தாவளமாம்
வெண்பட்டு தானுடுத்து மாடனும் வேட்டைக்கு போகையிலேவெறிகள் இசக்கி வந்து மாடனை கும்பிட வந்தாளாம்
திருநீறும் பூசிக்கொண்டு மாடனும் தீச்சட்டி கையிலேந்திதெற்கு திசை நோக்கி மாடனும் சீறி அலறி வரார்
கருத்த சித்தாடை இசக்கி கையில் வளை அடுக்கிகாட்டெருமை மீதில் மாடனை காணவே வந்தாளாம்பயங்கர காட்டெருமை மீதில் மாடனை காணவே வந்தாளாம்
வீர பத்ரனுடன் மாடனும் வேகமாய் முன்னடக்கமணிகண்டன் சன்னதியில் மாடனும் விந்தையாய் ஆடி வரார்வீர மணிகண்டன் சன்னதியில் மாடனும் விந்தையாய் ஆடி வரார்(மாடன் வரானே…)