ஐயப்பன் வழிபாடு ›

ஜாதியில்லை மதமில்லை

சுவாமியே… ஐயப்பா சுவாமியே… ஐயப்பா
ஜாதியில்லை மதமில்லை யாவரும் சரிசமம்சபரி மலை சாஸ்தாவின் அன்பு ஒன்றே சங்கமம்ஏழையில்லை செல்வமில்லை எங்குமில்லா அற்புதம்எல்லையில்லா இன்பவெள்ளம் ஐயப்பன் பொற்பதம் (சுவாமியே…)
நீதி உண்டு நேர்மை உண்டு நீண்டகால நோன்பும் உண்டுஏற முடியா மலையைக் கண்டு இளைக்காத மனமும் உண்டுபூவில் வண்டு தேனை உண்டு போதையும் உண்டு – அந்தபூத நாதன் கோவிலிலே ஆடுகின்ற பாடலும் (சுவாமியே…)
குத்துக்கால் ஊன்றி கொண்டு கொடிகின்ற கைகளுண்டுகோடி சூரிய ஒளியைப் போல மேனியெல்லாம் மின்னுகின்றபட்டாடை பவழச் செவ்வாய் முத்துரத்தின் சிரிப்பும் உண்டுசொக்கிப் போய் நிற்பதுண்டு சொல்லுவது உந்தன் சரணம் என்று (சுவாமியே…)
தர்ம சாஸ்தா மண்டல சரணம் சரணம் ஐயப்பாதர்ம சாஸ்தா மண்டல சரணம் சரணம் ஐயப்பா (சுவாமியே…)